பிரமாண்டமாகத் தொடங்கிய புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை 
இந்தியா

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்!

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதர் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக தொடங்கியது

DIN

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஒடிஸா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை தொடக்கி வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

கோயிலில் மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் மூலவர்களாக அலங்கரிக்கப்பட்ட தேரில் தனித்தனியாக எழுந்தருளினர்.

ஜெகநாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டிருந்தது.

தங்கத் துடைப்பத்தால் ரதங்கள் பயணிக்கத் தொடங்கும் வழியை சுத்தம் செய்த பின்னரே, ரத யாத்திரை தொடங்கும்

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார். முன்னதாக ஜெகந்நாதர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதல்வர் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் ரத யாத்திரையை தொடக்கிவைக்கும் காட்சி

ரத யாத்திரைக்காக ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT