கோப்புப்படம் | ஏஎன்ஐ
இந்தியா

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பிறந்தநாள்: ஜெகன், குடும்பத்தினர் மரியாதை!

ராஜசேகர ரெட்டியின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

DIN
டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 75வது பிறந்தநாள் இன்று (ஜூலை 8) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அவரது மகனும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது தாயார் விஜயம்மா மற்றும் குடும்பத்தினருடன் ஆந்திர பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தில் புலிவேண்டுலாவிலுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும், அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவராகவும் போற்றப்பட்ட ராஜசேகர ரெட்டி, 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT