மும்பையில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்
இந்தியாமும்பையில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்
மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 8) அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரை, சுமார் 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மாநகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
விடாது மழை பெய்து வருவதால் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கனமழையால் மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்றும் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.