புதுச்சேரியில் பள்ளிநேரம் மாறுகிறது!
புதிய நடைமுறை காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வருகிறது
இந்தியாபுதுச்சேரியில் பள்ளிநேரம் மாறுகிறது!
புதிய நடைமுறை காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வருகிறது
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளுக்கான வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 3.45 மணிவரையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் வகுப்பு நேரங்களை மாற்றியமைத்து, புதுச்சேரியின் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இனிவரும் நாள்களில் பள்ளிகள் காலை 9 மணிக்குத் தொடங்கப்படும். தொடர்ந்து மதியம் 12.25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படும். அதன்பிறகு 1.35 மணிக்கு தொடங்கி, மாலை 4.20 மணி வரையில் பள்ளிகள் செயல்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை காமராஜர் பிறந்தநாளான வருகிற ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.