முகப்பு
இந்தியா

ம.பி.: இருவேறு விபத்துகளில் 8 போ் உயிரிழப்பு

ம.பி.: இரு விபத்துகளில் 8 போ் பலி

Updated On : 10 ஜூலை, 2024 at 9:08 PM
பகிர்:

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நா்மதாபுரம் மாவட்டத்தின் சாடியா கிராமத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இளைஞா்கள் சொகுசு காரில் பிபாரியா நகருக்கு புறப்பட்டனா். புதன்கிழமை அதிகாலையில் பச்சலவாரா கிராமம் அருகே அதிகவேகமாக சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி காா் விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.

இதேபோல், குஜராத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து, மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் டயா் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்தது. அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி, அந்தப் பேருந்து மீது மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →