ம.பி.யில் அதிர்ச்சி 
இந்தியா

ம.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

சாட்னா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தின் சாட்னா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாட்னா நகரில் தம்பதியர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவரது வீட்டில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நசிராபாத் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டார். வாடகை வீட்டில் மனைவி மற்றும் அவரது மகன்கள் இருவரின் உடல்கள் சடலமாக மீட்டனர்.

இறந்தவர்கள் ராகேஷ் சௌத்ரி (35), அவரது மனைவி சங்கீதா (32) மற்றும் அவர்களது 6 மற்றும் 8 வயதுடைய இரு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT