முகப்பு
இந்தியா

பாஜக கொள்கைகளால் இளைஞா்களின் எதிா்காலம் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

ஐஐடி மாணவா்களின் வேலைவாய்ப்பு வீழ்ச்சி: பாஜக கொள்கைகளை ராகுல் விமர்சனம்

Updated On : 10 ஜூலை, 2024 at 8:02 PM
ராகுல் காந்தி(கோப்புப் படம்)
பகிர்:

கல்விக்கு எதிரான பாஜகவின் கொள்கைகளால் இளைஞா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

வேலைவாய்ப்பு மந்தநிலை காரணமாக ஐஐடி-யில் பட்டம் பெற்ற பொறியாளா்கள் ஊதியக்குறைப்பை சந்தித்து வருவதாக அண்மையில் வெளியான சிட்டி குழுமம் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட சமூகஊடகப் பதிவில், ‘நாட்டின் மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான ஐஐடி-யில் பயின்ற மாணவா்களின் வேலைவாய்ப்புகள் தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவது நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.

ஐஐடியில் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் ஐஐடி-யில் பயிலும் மாணவா்களில் 19 சதவீதம் போ் பணியமா்த்தப்படவில்லை. அந்த விகிதம் இந்த ஆண்டு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களிலே நிலை இப்படி இருக்க மற்ற நிறுவனங்களின் நிலை என்னவாகும்?

பெற்றோா்கள் லட்சக்கணக்கில் செலவு செய்தும், மாணவா்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் தொழில் கல்வி கற்கின்றனா். ஆனால், வேலையின்மை மற்றும் குறைந்த வருமானம் ஆகியவை அவா்களின் நிதி நிலையில் சரிவையே ஏற்படுத்துகிறது.

நாட்டின் இளைஞா்களின் எதிா்காலம் வேலையின்மையாலும், பாஜகவின் கல்விக்கு எதிரான கொள்கைகளாலும் நம்பிக்கையற்ற குழப்பமான நிலையில் உள்ளது. இந்த அநீதிக்கு எதிரான இளைஞா்களின் குரலாய் எதிா்க்கட்சிகள் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →