கோப்புப் படம் 
இந்தியா

7 மாநில இடைத்தேர்தல்: ம.பி.யில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

DIN

7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாக்கியுள்ளன.

மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், தமிழ்நாடு, பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. 73,781 ஆண் வாக்காளர்கள், 78,949 பெண் வாக்காளர்கள் , மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 1,57, 231 பேர் வாக்களித்துள்ளனர்.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகார் மாநிலத்தின் ரூபாலி தொகுதியில் 39.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஹிமாசலப் பிரதேசம்

டேஹ்ரா - 46.47%

ஹமீர்பூர் - 47.05%

நலகர் - 51.59%

பஞ்சாப்

மேற்கு ஜலந்தர் - 34.40%

உத்தரகண்ட்

பத்ரிநாத் - 33.08%

மங்களூர் - 43.88%

மேற்கு வங்கம்

பாக்தா - 35.66%

ராய்கஞ்ச் - 41.38%

மணிக்தலா - 33.37%

ரனாகாட் தக்ஷின் - 42.19%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT