முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது

Updated On : 11 ஜூலை, 2024 at 12:01 AM
பகிர்:

வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, எம்எல்ஏ பசனகெüடா தத்தால் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.

கர்நாடக அரசின் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து சட்ட விரோதமாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 187 கோடி நிதி மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே வளர்ச்சிக் கழகத்தின் நிதி கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மே 26 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா, தனது பதவியை ஜூன் 6 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.

மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக 11 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இதுவரை ரூ. 14.5 கோடி மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரில் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான பசனகெüடா தத்தால் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு எட்டு மணி நேரம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, காங்கிரஸ் எம்எல்ஏ பசனகெüடா தத்தால், வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.ஜெ.பத்மநாப், கணக்கு அதிகாரி பரசுராம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூன்று அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிமுதல் இச்சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனைகளின்போது கர்நாடக போலீஸôருக்குப் பதிலாக, மத்திய ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அமலாக்கத் துறை பெற்றிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →