சென்னை உயர்நீதிமன்றம் 
இந்தியா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீ ராம் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை...

DIN

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தில்லி, ஹிமாசல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், கேரளம், மத்தியப் பிரதேசம், சென்னை மற்றும் மேகாலயா ஆகிய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதன்படி உச்சநீதிமன்றம் கொலீஜியம் ஏழு உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதியை இன்று பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே 23-ம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் முர்முவின் உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் கடந்த மே 24 முதல் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நேற்று கூடியது. இதில்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவனையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமையும், தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மன்மோகனையும், ஹிமாசல் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ராஜீவ் ஷக்தேரையும் நியமிக்கப் பரிந்துரைத்தது.

அதேபோன்று, எம்.எஸ். ராமச்சந்திர ராவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக என். கோட்டீஸ்வர் சிங்கையும், நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியாவை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT