சோனியா காந்தியை சந்திந்தபோது.. 
இந்தியா

நீதித்துறையை பாஜக அவமானப்படுத்துகிறது: சோரன் குற்றச்சாட்டு!

கேஜரிவாலுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

DIN

மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் சோரன் பேசினார்.

சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு சோனியா காந்தியை நான் சந்திக்கவில்லை. அதனால்தான் அவரைச் சந்திக்க வந்தேன். ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியர்கள் மிகவும் சகிப்புத்தன்மையும், ஒத்துழைப்பும் உள்ளவர்கள். மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியுள்ளது. அரவிந்த் கேஜரிவாலுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கலால் கொள்ளை தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கிடைத்து. ஆனால் கடந்த ஜூன் 25-ம் தேதி இதே வழக்கில் சிபிஐ அவரை கைது செய்யப்பட்டதால், சிறையிலிருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை என்றார்.

முன்னதாக கலால் வழக்கில் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஜூன் 28 அன்று நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. இதையடுத்து, எம்எல்ஏ கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் சம்பயி சோரன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT