முகப்பு
இந்தியா

இளைஞரை 40 நாள்களில் ஏழு முறை கடித்த பாம்பு! ஒவ்வொரு சனிக்கிழமையும்!!

இளைஞரை 40 நாள்களில் ஏழு முறை கடித்த பாம்பு, அதுவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கடித்திருப்பதாகப் புகார்

Updated On : 13 ஜூலை, 2024 at 8:52 AM
பாம்பு - கோப்பிலிருந்து
பகிர்:

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேஹ்பூர் பகுதியைச் சேர்ந்த விகாஷ் தூபே என்ற 24 வயது இளைஞர்ரை, கடந்த 40 நாள்களில் ஏழு முறை பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து பாம்புக்கடிக்கு உள்ளானதால், மருத்துவச் செலவுகளுக்கு திண்டாடி, உதவி கேட்டு உள்ளூர் நிர்வாகத்தை நாடியிருக்கிறார் விகாஷ் தூபே. இதன் மூலம் இவரைப் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.

ஒரு முறை நிகழ்ந்தால் தவறு, இரண்டு முறை நடந்தால் எதேச்சையாக நடந்தது, மூன்று முறை நடந்தால் பழக்கம் என்னும் வாய்மொழிக்கு ஏற்ப, விகாஷ் தூபேவை தொடர்ந்து 40 நாள்களுக்குள் ஏழு முறை பாம்பு கடித்திருப்பது கற்பனை செய்ய முடியாத அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விகாஷ், கண்ணீர் விட்டு அதிகாரிகளிடம் அழுதுள்ளார். பாம்புக் கடிக்கு சிகிச்சை பெற ஏராளமான பணம் செலவழித்துவிட்டதாகவும், தனக்கு உதவும்படியும் கோரியிருக்கிறார். அங்கிருந்த அதிகாரிகள், அவரை பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இனி அங்குச் செல்லுமாறும் மூத்த மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விகாஷை, பாம்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் கடிப்பதாகவும், அவர் தொடர்ந்து ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த நாளே சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புவதாகக் கூறுகிறார். இது எங்களுக்கு விநோதமாக உள்ளது. இது குறித்து விசாரிக்கவிருக்கிறோம் என்கிறார்கள்.

இது குறித்து விசாரிக்க மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →