உச்சநீதிமன்றம். 
இந்தியா

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் - உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது: முஸ்லிம் வாரியம்

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Din

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து சட்ட வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அந்த வாரியம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘திருமண வாழ்க்கையை பராமரிப்பது கடினமாகிவிட்டால், மனித குலத்துக்கு விவாகரத்து ஒரு தீா்வாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீா்ப்பு, வலிமிகுந்த உறவில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்குவதாக உள்ளது.

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிராக உள்ள இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான சட்ட ரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் ஆராய அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தலைவா் காலித் சைஃபுல்லா ரஹ்மானிக்கு வாரியம் தரப்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT