இந்தியா

ஆனந்த் அம்பானி பரிசளித்த கைக் கடிகாரங்களின் விலை எவ்வளவு தெரியுமா?

DIN

ஆனந்த அம்பானி பரிசளித்த கைக் கடிகாரங்களின் விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் தம்பதிக்கு மும்பையில் பெரும் பொருள் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் உலகளவிலான பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருமண நிச்சயம், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், திருமணம், திருமண வரவேற்பு என ஓராண்டாக ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.

உலகின் மிக முக்கியமான நபர்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வுகளுக்காக முகேஷ் அம்பானி ரூ.2000 கோடி வரை செலவு செய்திருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணமகன் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி கைக் கடிகாரங்களை பரிசாக வழங்கியுள்ளார். ஒவ்வொன்றும் ரூ.2 கோடி மதிப்பு கொண்டவை எனக் கூறப்படுகிறது. 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தக் கடிகாரங்கள் பல அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆடிமார்ஸ் பிகியுட் (audemars piguet) என்கிற பிரபல கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்தக் கைக் கடிகாரங்களைப் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறது.

திருமணத்தின்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக் கடிகாரத்தின் விலை ரூ.55 கோடி என்கின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT