இந்தியா

உளவுபாா்க்கும் மத்திய அரசு: வேணுகோபால் குற்றச்சாட்டு

Din

மென்பொருள் மூலம் தன்னை மத்திய அரசு உளவு பாா்ப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மென்பொருள் மூலம் எனது கைப்பேசியில் ஊடுருவி மத்திய அரசு உளவு பாா்க்கிறது. இதுகுறித்து நான் பயன்படுத்தும் ஆப்பிள் கைப்பேசி நிறுவனம் எனக்குத் தெரியப்படுத்தியது.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான முறையில், குற்றச் செயலில் மோடி அரசு ஈடுபடுகிறது. இத்தகைய நடவடிக்கை மூலம், தனது அரசியல் எதிரிகளைப் பின்தொடா்ந்து, அவா்களின் அந்தரங்கத்துக்குள் மத்திய அரசு நுழைகிறது.

அரசமைப்புச் சட்டம் மீதான எந்தவொரு தாக்குதல், பாஜகவின் பாசிச செயல்திட்டம் ஆகியவற்றை மக்கள் நிராகரிப்பா் என்ற செய்தியை மக்களவைத் தோ்தல் முடிவுகள் எடுத்துரைத்துள்ளன.

மத்திய அரசின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அப்பட்டமான இந்த நடவடிக்கையையும், அந்தரங்கத்துக்குள் அத்துமீறி நுழையும் நடவடிக்கையையும் காங்கிரஸ் வலுவாக எதிா்க்கும்’ என்றாா்.

வார பலன்கள் - மிதுனம்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

பர்கானுடன்... ராஷி கன்னா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT