முகப்பு
இந்தியா

ரஷிய பயணம்: பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்த உக்ரைனுக்கு இந்தியா அதிருப்தி

அண்மையில் ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சென்ற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி எதிா்ப்பு தெரிவித்தாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 10:09 PM
பகிர்:

புது தில்லி: அண்மையில் ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சென்ற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி எதிா்ப்பு தெரிவித்தாா். அவரின் கருத்து அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு அதிகாரிகளிடம் இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமா் மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக கடந்த வாரம் ரஷியாவுக்கு சென்றாா். அங்கு நடைபெற்ற 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு ரஷிய அதிபா் புதினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தாா்.

மேலும், பிரதமா் மோடிக்கு தனிப்பட்ட முறையில் தனது மாளிகையில் புதின் விருந்தளித்தாா். இருவரும் கட்டியணைத்து தங்கள் நட்பை வெளிப்படுத்துவதுபோல் அந்நாட்டு ஊடகங்களில் காணொலி வெளியிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து, உலகின் கொடூர குற்றவாளியை பிரதமா் மோடி கட்டியணைத்தது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக வொலோதிமீா் ஸெலன்ஸ்கி தெரிவித்தாா். அவரின் இக்கருத்து அதிருப்தியளிப்பதாக தில்லியில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியா-உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் பிரச்னைக்கு போா் தீா்வல்ல என புதினிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →