கோப்புப்படம் 
இந்தியா

6 மாநிலங்களுக்கு சிறப்புப் பொருளாதார நிதி உதவி?

பிகார், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்.

இணையதளச் செய்திப் பிரிவு

வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கியுள்ள 6 மாநிலங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்புப் பொருளாதார நிதியுதவி வழங்க பரிசீலிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகார், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்ற பட்ஜெட்டில் துறை வாரியான வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மானியங்களை பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய இரு கட்சிகளாக பிகாரை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திரத்தை ஆட்சி செய்யும் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளன. அடுத்தாண்டு பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தி வருகிறார். அதேபோல், செவ்வாய்க்கிழமை தில்லிக்கு பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற சிறப்புப் பொருளாதார மானியம் கோரியுள்ளார்.

பிகாரின் மோசமான பொருளாதார நிலை மற்றும் அம்மாநிலத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதுக்கப்படுவதன் அடிப்படையில் அம்மாநிலம் நீண்ட காலமாக சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றது.

இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“நிதி அயோக் சில விதிமுறைகளை நிர்ணயித்துள்ள நிலையில், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தற்போது சாத்தியமில்லை. ஆனால், மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிகார், ஆந்திரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியிலும் உறுதியாக உள்ளது. வரவிருக்கும் பட்கெட்டில் 5 அல்லது 6 மாநிலங்களுக்கான சிறப்பு பொருளாதார மானியம் வழங்குவதை நிராகரிக்க முடியாத நிலை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து அனைத்து மாநிலங்களிடமும் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இதில், சில மாநிலங்கள் சிறப்பு பொருளாதார மானியத்தை கோரியுள்ளது.

குறிப்பாக இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஜம்மு - காஷ்மீரின் சுற்றுப்புற வளர்ச்சிக்காக சில பொருளாதார மானியங்கள் பெறக்கூடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், “சிறப்பு அந்தஸ்து கோரி வரும் ஆந்திரம் மற்றும் பிகார் மாநிலங்கள் சாலை, தொழில், மின்சாரம், விவசாயம் போன்ற துறை வாரியான பொருளாதார மானியங்களை பட்ஜெட்டில் பெறலாம். தற்போதைய வழிகாட்டுதல்படி, சிறப்பு அந்தஸ்து அங்கீகரிப்பது சாத்தியமில்லை என்றாலும், கணிசமான பொருளாதார மானியங்கள் வழங்கப்படலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT