ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து மாயமான இந்தியர்கள் உள்பட 13 பேரை மீட்கும் பணியில் இந்திய போர்க் கப்பல் ஐஎன்எஸ் தேஜ் ஈடுபட்டுள்ளது.
இதுவரை 8 இந்தியர்கள், ஒரு இலங்கை நாட்டினர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 இந்தியர்கல் உள்பட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துபையில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பல், ஏமனின் ஏரன் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகாவில் உள்ள துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் 25 கடல் மைல் தொலைவில் ஜூலை 15-ஆம் தேதி அந்த கப்பல் கவிந்தது.
அந்த கப்பலில், 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கை நாட்டினர் பணியாற்றிய நிலையில், தேடுதல் பணியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தேஜ் களமிறங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.