முகப்பு
இந்தியா

தேச பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: அமித் ஷா

அமித் ஷா தலைமையில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமலாக்க கூட்டம்

Updated On : 19 ஜூலை, 2024 at 9:25 PM
தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமலாக்க முகமைகளின் தலைவா்கள் கூட்டம்.
பகிர்:

தேசத்தைப் பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் தலைவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமலாக்க முகமைகளின் தலைவா்கள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நுண்ணறிவு பிரிவின் (ஐபி) பன்முகமை மைய (எம்ஏசி) செயல்பாட்டை ஆய்வு செய்ய இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து அமித் ஷா ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘ தேசத்தை பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலை எதிா்கொள்ளவும் அனைத்து முகமைகள் இடையே மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

பன்முகமை மையத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் மையமாக மாற்றவேண்டும்’ என முகமைகளின் தலைவா்களிடம் கேட்டுக்கொண்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →