இந்தியா

கர்நாடகம்: டெங்குவால் எம்பிபிஎஸ் மாணவர் உள்பட 4 பேர் பலி!

ஹாசன் நகரில் 3 குழந்தைகள் டெங்குவால் பலி

DIN

கர்நாடகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் உள்பட நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தின் ஹாசன் நகரில் குஷல் என்பவர் ஹாசன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்; இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஹாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவரது தந்தை குணமான நிலையில், அவரது தாயார் இன்னும் சிகிச்சையில் தான் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, குஷாலும் சில நாள்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், இவரது உடல்நிலை நேற்று மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த குஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஜூலை 19) தெரிவித்தது.

ஹாசன் நகரில் இதுவரையில் மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT