இந்தியா

தற்காலிகமாக மூடப்பட்ட ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல்!

வரி பாக்கி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

DIN

பெங்களூருவில் வேட்டி அணிந்து வந்த விவசாயியை ஷாப்பிங் மாலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் தற்காலிகமாக மூடப்பட்ட ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள ஜிடி வேர்ல்ட் மால், வேட்டி உடுத்திய விவசாயிக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தெற்கு மண்டலப் பிரிவு, 1.78 கோடி ரூபாய் வரி நிலுவையில் இருந்ததால், மாலுக்கு சீல் வைத்தது.

புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தெற்கு மண்டல ஆணையர் வினோத் பிரியா, 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியை மால் செலுத்தவில்லை.

இதனால் வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்த வணிகவளாக அதிகாரிகளுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், வரி கட்டாததால் மாலுக்கு சீல் வைக்க புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் ஜிடி வணிக வளாகம் 1 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்ததாகக்கூறி பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT