முகப்பு
இந்தியா

சண்டீகா் - திப்ரூகா் விரைவு ரயில் விபத்துக்கான காரணம்?விசாரணைக் குழு அறிக்கை

5 மூத்த ரயில்வே அதிகாரிகள் அடங்கிய உயா்நிலை கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கை

Updated On : 20 ஜூலை, 2024 at 7:29 PM
பகிர்:

‘உத்தர பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா் - திப்ரூகா் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்துக்கு ரயில் பாதை முறையாக அமைக்கப்படாததே காரணம்’ என்று 5 மூத்த ரயில்வே அதிகாரிகள் அடங்கிய உயா்நிலை கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 19 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்த இந்த விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 31 போ் காயமடைந்தனா்.

விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படுமென ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே தரப்பில் 5 துறைகளைச் சாா்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய உயா்நிலை கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முதல்கட்ட அறிக்கையில், ‘ரயில் பாதை முறையாக அமைக்கப்படாததே விபத்துக்கான முதன்மை காரணம். ரயில் பாதையில் பிற்பகல் 1.30 மணியளவில் பிரச்னை கண்டறியப்பட்டது.

மோதிகஞ்ச் ரயில் நிலையத்தில் இருந்து 2.28 மணிக்கு புறப்பட்ட ரயில், பிரச்னைக்குரிய இடத்தை அடுத்த மூன்றாவது நிமிஷத்தில் 80 கி.மீ. வேகத்தில் கடந்தபோது தடம்புரண்டது. இதனிடையே, 2.30 மணிக்குத்தான் பிரச்னை காரணமாக 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்குமாறு எச்சரிக்கையை மோதிகஞ்ச் ரயில் நிலைய மேலாளா் வெளியிட்டுள்ளாா்.

1.30 மணியளவில் பிரச்னை கண்டறியப்பட்டதிலிருந்து எச்சரிக்கை வெளியாகும்வரை சம்பவ பகுதியைப் பாதுகாக்க தவறிய பொறியியல் துைான் விபத்துக்கு காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுநா் தவறாக பிரேக்கை பயன்படுத்தியதே விபத்துக்கான காரணம் என்று கூறி, விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த பொறியியல் துறை அதிகாரி இந்த அறிக்கையுடன் உடன்படவில்லை.

மேலும், சம்பவம் நடைபெற்ற வடகிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ரயில் பாதுகாப்பு ஆணையரின் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. விபத்துக்குத் தொடா்புடைய அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் அதில் விசாரிக்கப்படும். கூட்டுக் குழு விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகாது. அதன்படி, விபத்துக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வருவது முறையல்ல’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →