விமான சேவைகள் சீரடைந்து வருகிறது: விமானப் போக்குவரத்து துறை
படிப்படியாக விமான சேவைகள் சீரடைந்து வருவதாக விமானப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவிமான சேவைகள் சீரடைந்து வருகிறது: விமானப் போக்குவரத்து துறை
படிப்படியாக விமான சேவைகள் சீரடைந்து வருவதாக விமானப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் விண்டோஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விமான சேவைகள் படிப்படியாக சீரடைந்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் விமான சேவைகள் நேற்று பெரிய அளவில் பாதிப்பை சந்தித்த நிலையில், தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், நேற்றைய தடையால் ஏற்பட்ட பின்னடைவுகள் படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இன்று இரவுக்குள் நாடு முழுவதும் விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்னையால் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
சென்னை மதுரை உட்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் மைக்ரோசாஃப்ட் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பு சீரடைந்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.