அமர்நாத் 
இந்தியா

அமர்நாத்: 21 நாள்களில் 3.75 லட்சம் பேர் தரிசனம்!

ஒரேநாளில் 11 ஆயிரம் பேர் தரிசனம்...

DIN

வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3.75 லட்சம் பக்தர்கள் குகை லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், 21 நாள்களைக் கடந்துள்ளது. தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசித்துவிட வேண்டும் இந்துக்களின் கடமையாகக் கருதுகின்றனர்.

இதனிடையே, காஷ்மீரில் இடியுடன் கூடிய மழை இடைவிடாது பெய்து வந்தாலும், வெள்ளிக்கிழமை ஒருநாளில் மட்டும் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 3,471 பேர் அடங்கிய மற்றொரு குழு இன்று புறப்பட்டது. 35 வாகனங்களில் 1,073 பேர் பால்டால் அடிவார முகாமிலிருந்தும், 2,398 பேர் அடங்கிய குழு 79 வாகனங்களில் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டது.

52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 29 அன்று ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

நாகூரில் தந்தையைக் கொன்ற மகன் கைது!

பைக்கில் சென்ற பெண்ணின் தங்கச் செயினை பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னா!

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

SCROLL FOR NEXT