கோப்புப் படம். 
இந்தியா

கேரளம்: நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

கோழிக்கோட்டில் நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கேரள மாநிலம், பாண்டிக்காடு பகுதியைச் சிறுவனுக்கு நிஃபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள மத்திய ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் சிறுவன் நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிறுவன வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் பலியானார். சிறுவனை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி இறுதிச் சடங்குகள் நடைபெறும். சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடிய பிறகே இறுதிச்சடங்கு குறித்த கூடுதல் விஷயங்கள் முடிவு செய்யப்படும் என்றார். இனிடையே அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தொற்றின் மையப்பகுதியாக கருதப்படும் பாண்டிக்காடு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT