ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருது

உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Din

காங்கிரஸ் மூத்த தலைவரும் மறைந்த கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கமும், பிரபல திரைப்பட கலைஞா் நேமம் புஷ்பராஜ் வடிவமைத்த சிற்பமும் உள்ளடக்கியதாகும்.

இது தொடா்பாக உம்மன் சாண்டி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீா்வு கண்ட தேசிய தலைவா் ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருதை காங்கிரஸ் எ.பி. சசி தரூா் தலைமையிலான குழு தோ்வு செய்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தது.

உம்மன் சாண்டியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட மூன்று நாள்களில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் எம்.பி. சசிகாந்த் செந்தில்!

உத்தமபாளையம்: இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்

ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் புதிய படம்!

இடிந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து! இந்திய ராணுவம் கட்டிய தற்காலிக பாலம்!

SCROLL FOR NEXT