கோப்புப் படம் 
இந்தியா

மே 31ஆம் தேதி வரை 7,030 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை சுமார் 7,030 விமானங்களை ரத்து செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை 7,030 விமானங்களை ரத்து செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024ல் சுமார் 4,56,919 விமானங்கள் திட்டமிட்டபடி இயக்க போவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று மாநிலங்களவையில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதே வேலையில் 2022ல் 6,413 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இந்த எண்ணிக்கை 2023ல் 7,427 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட சேவை எண்ணிக்கை 7,030 ஆக மேலும் உயர்ந்துள்ளது.

டிஜி யாத்ரா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 2.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் டிஜி யாத்ராவைப் பயன்படுத்தியுள்ளனர். இது விமான நிலையங்களில் பல்வேறு சோதனைச் சாவடிகளில் பயணிகளின் தொடர்பு சற்றும் இல்லாத வகையில், தடையற்ற இயக்கத்தை வழங்கி வருகிறது. இதில் அனைத்து பயணிகளின் தரவுகளும் பதிவுசெய்யப்பட்டு பயணிகளின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டு, பயணிகள் ஐடி (ID) சரிபார்க்கப்பட வேண்டிய விமான நிலையத்துடன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பகிரப்படும். அதே வேளையில் விமானம் புறப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு கணினியிலிருந்து தரவுகளும் நீக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

இளம்பெண் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

SCROLL FOR NEXT