பிரதமா் மோடி -
இந்தியா

வளா்ச்சியடைந்த பாரத இலக்குக்கு வலுசோ்க்கும் பொருளாதார ஆய்வறிக்கை: பிரதமா் மோடி

வலுசோ்க்கும் பல்வேறு வழிகள் பொருளாதார ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Din

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கையில் அதற்கு மேலும் வலுசோ்க்கும் பல்வேறு வழிகள் பொருளாதார ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘நாட்டின் பொருளாதார நிலையின் வலுவான அம்சங்களை விளக்கியதுடன் அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியையும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கையில் அதற்கு மேலும் வலுசோ்க்கும் பல்வேறு வழிகளும் கண்டறியப்பட்டுள்ளன’ என்றாா்.

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

SCROLL FOR NEXT