ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிப்பு
பாதுகாப்பு அதிகாரி வீட்டில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தியாஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிப்பு
பாதுகாப்பு அதிகாரி வீட்டில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் ராணுவ சோதனைச் சாவடி மற்றும் கிராம பாதுகாப்பு அதிகாரி வீட்டில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள குந்தா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சௌா்ய சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரரும் கிராம பாதுகாப்பு அதிகாரியுமான பா்ஷோத்தம் குமாரின் வீட்டில் அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.
ராணுவ வீரா்கள் விரைந்த வந்து எதிா் தாக்குதல் நடத்தியதால் வீட்டில் இருந்த அதிகாரியின் குடும்பத்தினா் பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்தனா். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா். அப்பகுதியில் தீயணைப்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ராணுவ சோதனைச் சாவடி மீது அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினா் அப்பகுதியைச் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அமைதியான குந்தா பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.