சத்ருகன் சின்ஹா 
இந்தியா

மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சத்ருகன் சின்ஹா!

தனிப்பட்ட சில காரணத்தால் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்க இயலாத நிலையில், இன்று பதவியேற்றுக் கொண்டார்.

PTI

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சத்ருகன் சின்ஹா, கடவுளின் பெயரில் இந்தியில் பதவியேற்றார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மக்களவையின் முதல் கூட்டத்தொடரின்போது, தனிப்பட்ட சில காரணத்தால் அவரால் உறுப்பினராகப் பதவியேற்க இயலாத நிலையில், இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார்.

மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரே பரேலியைத் தக்கவைத்துக்கொண்டார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியபோது மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருக்கு பாஜக சார்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு சின்ஹா தாவினார். பிறகு காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்! யாரைச் சொல்கிறார் கமல்?

பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!

அனுமனைத் தவறாக பேசுவதா? ராஜமௌலி மீது புகார்!

பிகார் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர்! நிதீஷைப்போல இபிஎஸ் முதல்வராவார்! - திண்டுக்கல் சீனிவாசன்

பிரதமர் மோடி கோவை வருகை! விமான நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

SCROLL FOR NEXT