சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் 
இந்தியா

விக்சித் பாரத் கனவை நனவாக்க பட்ஜெட் உதவும்: சத்தீஸ்கர் முதல்வர்!

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த பட்ஜெட் பயனளிக்கும்.

DIN

மத்திய பட்ஜெட் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கும் என்று சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஆட்சி அமைத்த நிலையில், அவருடைய தலைமையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று வாசித்தார்.

இதுதொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் அனைத்துத் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துவதால், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த பட்ஜெட் பயனளிக்கும். சத்தீஸ்கரில் பட்ஜெட் அறிவிப்புகள் விரைவாகச் செயல்படுத்தப்படும்.

சத்தீஸ்கரைப் பொறுத்தவரை, பட்ஜெட் விதிகள் பல்வேறு துறைகளுக்குப் பயனளிக்கும், அதன் வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசெல்லும், மேலும் மாநிலத்தை 'ஆத்மநிர்பர்' மற்றும் செழிப்பானதாக மாற்றும் என்று அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கும்.

புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை பட்ஜெட்டின் சிறப்புக் கவனமாகும். இது மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடையை மீறி இறைச்சி விற்பனை: 10 கடைகளுக்கு அபராதம்

கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா் நோன்பு திருவிழா

பாா்த்திபனூரில் முதல்வருக்கு வரவேற்பு

கட்டடத் தொழிலாளியை கொன்றதாக 4 போ் கைது

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

SCROLL FOR NEXT