நாடாளுமன்ற வளாகத்தில் சசிதரூர் பிடிஐ
இந்தியா

சுகாதாரம், கல்வி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை: சசிதரூர்

பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை என்றார் சசிதரூர்.

DIN

பாஜக கூட்டணி வைத்துள்ள பிகார், ஆந்திர மாநிலங்களைத் தவிர்த்து, மக்களுக்கான சலுகைகள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து கேரள மாநில எம்.பி. சசிதரூர் கூறியதாவது, மத்திய பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இடம்பெறவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

வருமானம் குறைவாக உள்ள 40 சதவீத மக்களின் வருவாயை உயர்த்துவது குறித்த எந்தவித தீவிர நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. சமத்துவத்தை நோக்கிய இதுபோன்ற அம்சங்கள் குறைவாகவே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி வைத்துள்ள பிகார், ஆந்திர மாநிலங்களைத் தவிர்த்து, மக்களுக்கான சலுகைகள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் வருமானம் குறைந்துள்ளது. அதற்கு என்ன செய்கிறார்கள்? பட்ஜெட்டில் மிகக்குறைவான அறிவிப்பு மட்டுமே உள்ளது என சசிதரூர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT