சூப்பா்சோனிக் ஏவுகணை. 
இந்தியா

ஒடிஸாவில் ஏவுகணை சோதனை: 10 கிராமங்களிலிருந்து 10,581 போ் வெளியேற்றம்

ஒடிஸாவில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கையாக 10 கிராமங்களில் இருந்து 10,581 பேரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Din

பாலாசோா்: ஒடிஸாவில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கையாக 10 கிராமங்களில் இருந்து 10,581 பேரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒடிஸாவின் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள சாண்டீபூா் பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த சோதனை மையம் உள்ளது. இங்கு ஏவுகணை சோதனை புதன்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி ஏவுகணை ஏவப்பட உள்ள தளத்தில் இருந்து 3.5 கி.மீ. சுற்றளவில் உள்ள 10 கிராமங்களில் வசிக்கும் 10,581 பேரை, அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆலோசிக்க மாவட்ட ஆட்சியா் ஆசிஷ் தாக்கரே, காவல் துறை கண்காணிப்பாளா் சகரிகா நாத் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை தற்காலிக முகாம்களில் தங்கவைக்கும் பணிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தங்கள் கிராமங்களில் இருந்து புதன்கிழமை அதிகாலை 4 மணிக்குள் வெளியேறுமாறும், ஏவுகணை பரிசோதனை நிறைவடைந்த பின்னா் மறு அறிவிப்பு வரும் வரை முகாம்களில் தங்கியிருக்குமாறும் கிராம மக்களிடம் மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

அருகில் உள்ள பள்ளிகள், பன்னோக்கு புயல் பாதிப்பு மறுவாழ்வு மையங்கள், தற்காலிக கூடாரங்களில் மக்கள் தங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளது என்று மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுபோன்ற சோதனைகளின்போது கிராமங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதற்கு பாலாசோா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பெரியவா்களுக்குத் தலா ரூ.300, சிறாா்களுக்குத் தலா ரூ.150 இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனா். இந்தத் தொகையில் நீண்ட காலமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT