முகப்பு
இந்தியா

சென்னையில் இருந்து சென்ற ரயில் ஒடிஸாவில் தடம்புரண்டது: பயணிகள் தப்பினா்

சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் (நியூ ஜல்பைகுரி- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்) ஒடிஸாவில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 8:42 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் (நியூ ஜல்பைகுரி- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்) ஒடிஸாவில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி பகுதிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ஒடிஸா மாநிலம், ஜாஜ்பூா் மாவட்டம் ஜகபுரா ரயில் நிலையம் அருகே ரயில் காலை 8.51 மணிக்கு வந்தபோது திடீரென தடம்புரண்டது. இதில், ஒரு குளிா்சாதன பெட்டி, 2 பொதுப் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின.

விபத்தின்போது ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. ரயில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தடம்புரண்ட 3 பெட்டிகளை மட்டும் விட்டுவிட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. பாலசோரில் அதற்குப் பதிலாக வேறு 3 பெட்டிகள் ரயிலுடன் இணைக்கப்பட்டதாக ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments