மத்திய பட்ஜெட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் விங் தோதாஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே செயல்படுகிறது. ராஜஸ்தானில் இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் 11 மக்களவைத் தொகுதிகளை பாஜக இழந்தது. எனவே பட்ஜெட்டில் ராஜஸ்தானை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
மத்திய அரசு அனைத்துப் பிரிவினருக்காகவும் செயல்படவில்லை. மத்திய பட்ஜெட் ராஜஸ்தானை ஏமாற்றமடையச் செய்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை குறிவைத்து மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கான குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் எதையும் வெளியாகவில்லை. அவர் ஜல் சக்தி அமைச்சராக இருந்தபோது, கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய திட்ட அந்தஸ்தைப் பெற இயலவில்லை என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.