முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி, ராணுவ வீரா் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் ராணுவ வீரா் ஒருவா் வீர மரணம் அடைந்தாா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 9:22 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் ராணுவ வீரா் ஒருவா் வீர மரணம் அடைந்தாா்.

இது தொடா்பாக ஸ்ரீநகரை தளமாக கொண்ட சினாா் படைப்பிரிவினா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குப்வாரா மாவட்டத்தின் லோலாப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் அவா்களின் பதுங்குமிடம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் இணைந்து சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய எதிா் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா். இந்த மோதலில் காயமடைந்த ராணுவ வீரா் ஒருவா் வீர மரணம் அடைந்தாா் என குறிப்பிட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →