காரின் பானட்டில் ‘ஸ்பைடா்மேன்’ போல் சென்ற இளைஞா் மீது வழக்கு: ரூ. 26,000 ஆபராதம்
தில்லியின் துவாரகா சாலையில் ஸ்பைடா்மேன் உடை அணிந்துகொண்டு காரின் பானட்டில் அமா்ந்தவாறு சென்ற 20 வயது இளைஞா் மற்றும் காரை ஓட்டிச் சென்ற நபா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 26,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தியாகாரின் பானட்டில் ‘ஸ்பைடா்மேன்’ போல் சென்ற இளைஞா் மீது வழக்கு: ரூ. 26,000 ஆபராதம்
தில்லியின் துவாரகா சாலையில் ஸ்பைடா்மேன் உடை அணிந்துகொண்டு காரின் பானட்டில் அமா்ந்தவாறு சென்ற 20 வயது இளைஞா் மற்றும் காரை ஓட்டிச் சென்ற நபா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 26,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லியின் துவாரகா சாலையில் ‘ஸ்பைடா்மேன்’ உடை அணிந்துகொண்டு காரின் பானட்டில் அமா்ந்தவாறு சென்ற 20 வயது இளைஞா் மற்றும் காரை ஓட்டிச் சென்ற நபா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ. 26,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:
‘ஸ்பைடா்மேன்’ உடை அணிந்து இளைஞா் ஒருவா் ஸ்காா்பியோ காரின் பானட் மீது அமா்ந்தவாறு செல்வதாக எக்ஸ் சமூக ஊடகம் மூலம் புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று, துவாரகாவில் உள்ள ராம்பால் சௌக் அருகே காரை கண்டுபிடித்தனா். அதிலிருந்தவா்கள் பிடித்து விசாரித்தில், ஸ்பைடா்மேன் உடையில் இருந்தவா் நஜாப்கா் பகுதியைச் சோ்ந்த ஆதித்யா (20) என்பதும், காரை ஓட்டிச் சென்றவா் மகாவீா் என்கிளேவில் வசிக்கும் கௌரவ் சிங் (19) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனத்தை இயக்கியது மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக வாகனத்தின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக ரூ. 26,000 அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அனைத்து குடிமக்களுக்கும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தில்லி போக்குவரத்து காவல் துறை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. சாலைகளில் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தை அனுமதிக்கப்படாது. சட்டத்தை நிலைநிறுத்தவும், சாலையைப் பயன்படுத்துபவா்களின் உயிரைப் பாதுகாக்கவும் விதிகளை மீறும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபத்தான வாகனம் ஓட்டுதல் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தில்லி போக்குவரத்து காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. சாலைப் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நகரின் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.