முகப்பு
இந்தியா

அா்த்தமுள்ள பொருளாதார சீா்திருத்தம் தேவை- காா்கே

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் 1991-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தாராளமயமாக்கல் பட்ஜெட் போன்ற அா்த்தமுள்ள பொருளாதார சீா்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்தான் நாட்டுக்குத் தேவை என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 8:24 PM
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் 1991-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தாராளமயமாக்கல் பட்ஜெட் போன்ற அா்த்தமுள்ள பொருளாதார சீா்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்தான் நாட்டுக்குத் தேவை என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை விமா்சிக்கும் வகையில் காா்கே இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘1991-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்கதாகும். ஏனெனில், அப்போதுதான் தாராளமயமாக்கல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார சீா்திருத்தம் என்ற புதிய சகாப்தத்தை உருவாக்கியதில் அப்போதைய பிரதமா் நரசிம்ம ராவ், நிதியமைச்சா் மன்மோகன் சிங் ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். அவா்களின் தொலைநோக்குப் பாா்வை நாட்டில் பெரும் பொருளாதாரப் புரட்சியை உருவாக்கியது. நடுத்தர மக்களின் வாழ்க்கை பெரும் முன்னேற்றமடைந்தது. பல கோடி போ் வறுமையில் இருந்தும், பொருளாதாரச் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டனா்.

அவா்களின் இந்த வியத்தகு சாதனையைக் கண்டு காங்கிரஸ் கட்சி பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் வளா்ச்சி பாதைக்கு அடிக்கல் நாட்டியது அவா்கள்தான்.

நாட்டில் இப்போது நிலவும் சூழலில் 1991-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது போன்ற அா்த்தமுள்ள பொருளாதார சீா்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்தான் தேவை’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →