படம் | X 
இந்தியா

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு!

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி , பாரிஸில் நடைபெறும் உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 ஆவது அமர்வில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தனிநபர் உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இணைந்த முதல் இந்தியப் பெண் என்ற முறையில், நீடா அம்பானி, ஒலிம்பிக் பார்வையை மேம்படுத்தி, உலகளாவிய அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் நடத்துவதில் நீடா அம்பானி முக்கிய பங்கு வகித்தார்.

வருகிற 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏலம் எடுக்க இந்தியா திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT