கேரள மாநிலத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளத்தில் நிஃபா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோவை மண்டலக் கல்லூரி கல்வி இயக்குநர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“கேரளத்தில் நிஃபா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கோவை மண்டலத்திற்குள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் தங்கள் மாணவ, மாணவியர்களை கேரளத்திற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.