மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ். கோப்புப் படம்
இந்தியா

வங்கதேச வன்முறை: அரசியல் கருத்துகளை மம்தா தெரிவிக்கக்கூடாது: ஆளுநா் வலியுறுத்தல்

வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது

Din

கொல்கத்தா, ஜூலை 25: வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது என அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வலியுறுத்தினாா்.

வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தர தயாராகவுள்ளதாக அண்மையில் மம்தா பானா்ஜி கூறினாா். இதற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஹசன் மஹ்மூத் ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘வங்கதேச வன்முறை குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது. அவரின் கருத்துகள் வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களை பாதிக்கும்’ என குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, மம்தா பானா்ஜி பேசிய காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து மஹ்மூத் வெளியிட்ட பதிவில்,‘மம்தா பானா்ஜியின் அறிக்கை பலதரப்பினா் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவா் பேசிய விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறோம்’ என குறிப்பிட்டாா்.

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT