செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) 
இந்தியா

செந்தில் பாலாஜி பிணை வழக்கு: ஆக.5க்கு ஒத்திவைப்பு!

லோக் அதாலத் வழக்கு விசாரணை இருப்பதால், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கிலிருந்து உடனே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. அதில் உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது

இந்த நிலையில், அடுத்த வாரம் முழுவதும் லோக் அதாலத் வழக்கு விசாரணை இருப்பதால், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 48-ஆவது முறையாக அண்மையில் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT