கார்கே 
இந்தியா

அக்னிபத் திட்டத்தை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பிரதமர்: கார்கே!

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அற்ப அரசியல் செய்கிறார்..

ANI

கார்கில் தினத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்பு அற்ப அரசியல் செய்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக்கின் கார்கில் விஜய் திவாஸின் 25வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்னையை அரசியலாக்குவதாகவும் எதிர்க்கட்சிளை விமரித்தார்.

இதுதொடர்பாக கார்கே எக்ஸ் தளத்தில் வெளிட்ட தகவலில்,

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அற்ப அரசியல் செய்வது வருந்தத்தக்கது. இதற்கு முன்னாள் இருந்த எந்த பிரதமரும் இதைச் செய்ததில்லை. மோடி ராணுவத்தின் உத்தரவின்பேரில் அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறினார். இது அப்பட்டமான பொய்.. நமது வீரம் மிக்க ஆயுதப்படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம்.

ராணுவ வீரர்களின் ஆள்சேர்ப்பு மற்றும் இத்திட்டத்தை முப்படைகளிலும் அமல்படுத்துவது குறித்து முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே கூறியதற்கு மாறாக மோடி அரசு செயல்படுகிறது. அக்னிபத் திட்டத்தில் 75 சதவீத ஆள்சேர்ப்பு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும், 25 சதவீத பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் மோடி அரசு அதற்கு நேர்மாறாகச் செய்து, மூன்று ஆயுதப் படைகளுக்கு இந்தத் திட்டத்தை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்தினார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT