உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண் 
இந்தியா

சொந்த மகனை தத்தெடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்

சொந்த மகனை தத்தெடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பெண் ஒருவர்.

DIN

விவாகரத்து பெற்றபிறகு, மறுதிருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தனது மகனை, அவரது தந்தையின் அனுமதியில்லாமல் சட்டப்படி தத்தெடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.

ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் (ஹமா)படி, ஒரு குழந்தையின் தந்தை அனுமதிபெற்றே தத்தெடுக்க முடியும்.

மனுதாரர் திவ்ய ஜோதி சிங், வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தனது மனு பற்றிய விளக்கத் அளித்துள்ளார். அதில், திவ்யா மற்றும் அவரது முன்னாள் கணவரும் வழக்குரைஞர்கள். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டு திவ்யா கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது கணவர் வேறொரு பெண்ணோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

பிறகுதான், திவ்யாவுக்கு மகன் பிறந்துள்ளார். மகனை ஒரு முறை கூட, அவரது கணவர் வந்து பார்க்கவில்லை. பிறகு 2016ஆம் ஆண்டு திவ்யாவுக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. திவ்யாவின் கணவருக்கு மறுதிருமணம் நடந்து குழந்தையும் பிறந்திருக்கிறது.

2020ஆம் ஆண்டு திவ்யா மறுதிருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து முன்னாள் கணவரால், திவ்யாவுக்கு தொடர்ந்து பிரச்னை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள, தனது மகனை சட்டப்படி, தான் மற்றும் தனது தற்போதைய கணவரும் சேர்ந்து தத்தெடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அதில், குழந்தை பிறந்தது முதல், அதனைப் பார்க்கக் கூட வராத, தந்தையின் அனுமதி இல்லாமல், தனது மகனை தத்தெடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றம், சட்டப்படி, தந்தையின் அனுமதியில்லாமல், எவ்வாறு தத்தெடுகக் அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, தில்லி காவல்துறை இது குறித்து முன்னாள் கணவருக்கு நோட்டிஸ் அனுப்பவும், இரண்டு வாரத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் எல்லாம் ஹீரோவா?பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சரத் குமார்!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்த தங்கம்!

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு! பேசியது என்ன?

எஸ்பிஐ வெகுமதி புள்ளிகள் என்ற பெயரில் எஸ்எம்எஸ்! ஏமாற வேண்டாம்!!

சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT