இந்தியா

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் எல்லையில் கூடுதலாக 2,000 வீரர்கள் குவிப்பு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியால் ஒடிஸாவில் இருந்து 2,000 வீரர்கள் காஷ்மீர் எல்லைக்கு மாற்றம்

DIN

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக ஒடிஸாவில் இருந்து 2,000 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் நிதின் அகர்வால் கடந்த 21-ஆம் தேதி ஜம்மு சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் கூடுதல் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை மூலம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக உத்தரவைத் தொடர்ந்து, ஒடிஸாவில் நக்ஸல்கள் எதிர்ப்பு திட்டத்தில் பதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீரர்கள் தற்போது காஷ்மீர் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் இந்தியா வருகை! ரஷிய துணை பிரதமருடன், ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை!

நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ

ஆம்பூர் அருகே சரக்கு வாகனம் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் பலி!

சேலையில் ஒளிரும் பாவை... ஹன்சிகா!

மினி கன்ட்ரிமென் ஆல்4 அறிமுகம்! 5.6 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும்!

SCROLL FOR NEXT