முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறாரா?..

ரஷிய நாட்டுடனான போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

இந்தியா

பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறாரா?..

ரஷிய நாட்டுடனான போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

Updated On : 27 ஜூலை, 2024 at 4:21 AM
கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் மோடி அடுத்த மாதம் உக்ரைன் நாட்டிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஷியாவுடனான போருக்குப் பிறகு உக்ரைனுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்று, உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கியை வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதியில் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

இருவரும் கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சந்தித்துக் கொண்டனர்.

கடந்த ஜூலை 8ஆம் தேதியில் பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரஷிய அதிபர் விளாதமீா் புதினைச் சந்தித்து இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

மோடியின் ரஷிய பயணம் குறித்து அறிந்த உக்ரைன் அதிபர், ``உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி” என்று கூறியிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →