பாதுகாப்பு, திறன் மேம்பாடு, செய்யறிவு.. இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம்!
பாதுகாப்பு, செய்யறிவு ஒத்துழைப்பு உள்பட இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளதைப் பற்றி...
பாதுகாப்பு, செய்யறிவு ஒத்துழைப்பு உள்பட இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
இந்தியா சார்பில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின்பேரில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக (பிப். 17 - 19) இந்தியா வந்துள்ளார்.
ரபேல் விமானம் தயாரிப்பு உள்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து கேட்வே ஆப் இந்தியாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும், மேக்ரானும் இணைந்து ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’-ஐ தொடங்கி வைத்தனர்.
Advertisement
Advertisement
மும்பையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, செய்யறிவு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.
அதன்பின்னர், இரு தலைவர்களும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து, இரு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனத் தலைவர்கள், புத்தாக்க நிறுவனர்கள் மத்தியில் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்யும்” என்று கூறினார்.
French President Emmanuel Macron is on a three-day visit to India to attend the AI Summit 2026 in New Delhi and to hold high-level discussions with the Indian leadership.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.