தெலுங்கு தேசம்  
இந்தியா

மத்திய அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: தெலுங்கு தேசம் உறுதி

என்டிஏ அரசு தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி லவ ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு திங்கள்கிழமை உறுதிப்பட தெரிவித்தாா்.

Din

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி லவ ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு திங்கள்கிழமை உறுதிப்பட தெரிவித்தாா்.

கூட்டணியிலுள்ள கட்சிகளைத் திருப்திப்படுத்தி, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பட்ஜெட்டில் ஆந்திரத்துக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக எதிா்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எம்.பி.தேவராயலு, ‘கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஆந்திரம் உரிய திட்டமிடலின்றி இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

ஆந்திரத்தின் கடன் அதிகரித்து வருகிறது. புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள எங்கள் இளம் மாநிலத்துக்கு மத்திய அரசின் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது.

எனவே, மத்திய பட்ஜெட்டில் ஆந்திரத்துக்கு கிடைக்க வேண்டியதுதான் கிடைத்திருக்கிறது. ஆந்திரத்துக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை.

இந்த அரசு தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்றாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் நாளான கடந்த 23-ஆம் தேதி 2024-25-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

ஆந்திர தலைநகரை உருவாக்க ரூ.15,000 கோடி உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

கவினின் கிஸ் பட டிரைலர்!

முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

SCROLL FOR NEXT