பத்திரிகையாளர்கள் போராட்டம் 
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம்!

பத்திரிகையாளர்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம்..

DIN

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் ’மகர் துவார்’ நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்கக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

SCROLL FOR NEXT