எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 
இந்தியா

பட்ஜெட் அல்வா தயாரிப்பதில்கூட எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர் இல்லை: ராகுல்

பட்ஜெட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கான அறிவிப்புகள் இல்லை.

DIN

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்வில்கூட தலித், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று இன்று உரையாற்றினார்.

அப்போது, பட்ஜெட்டில் எஸ்சி, எஸ்டி மக்கள் புறக்கணிப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு குறித்து அவர் பேசியதாவது:

“பட்ஜெட் குறிப்பிட்ட 3 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவிகிதம் பேர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை.

பட்ஜெட் தயாரிப்பு திட்டமிடலில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் இல்லை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்வில்கூட இந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் இல்லை.

கரோனா காலத்தில் கை தட்டுவது, மொபைல் போன்களில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு மத்திய அரசு கொடுத்த வேலைவாய்ப்புகளா?

நாட்டில் உள்ள இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது கட்டுப் போட முயற்சிப்பதை போல், இண்டெர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT